வருட இறுதிக்குள் அனைத்துக் காணிகளையும் விடுவிக்க ஏற்ப்பாடு!

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.


ஏற்கனவே இது தொடர்பான உத்தரவை பாதுகாப்பு படையினருக்கு வழங்கிய நிலையில், இன்று (திங்கட்கிழமை) மாகாண ஆளுநர்களுக்கும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

2018 ஆம் ஆண்டிற்கான மாகாண சபை செயற்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இந்த பணிப்புரையினை விடுத்துள்ளார். அண்மையில் இலங்கை நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இடம்பெற்ற வடக்கு அபிவிருத்தி செயலணியின் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் உள்ள மாகாண ஆளுநர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போதே பாதுகாப்பு படையினரின் வசமுள்ள காணிகளை இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதுடன், குறிப்பாக காணி விடுவிப்பு விடயத்தில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் ஜனாதிபதி, ஆளுனர்களை கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.