மைத்திரிபால சிறிசேனவிடம் ரனில் தெரிவித்தது என்ன??

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்கு பயணமாகியிருந்ததுடன், அது தொடர்பான முழுமையானத் தகவல்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று தெரிவித்துள்ளார்.


பிரதமரின் இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் குறித்த தகவல்களையும் ஜனாதிபதியிடம் பிரதமர்  தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான குறித்த சந்திப்பு இன்று பகல் ஜனாதிபதி செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.