ஈ.பி.டிபி, ரி.எம்.வி.பி., அகில இலங்கை தமிழர் கூட்டமைப்பில் இணைந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்து!

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பில் கட்சிகள் இணைவது தொடர்பான ஒப்பந்தத்தில் ஈ.பி.டிபி, ரி.எம்.வி.பி., அகில இலங்கை தமிழர் மகா சபை ஆகிய கட்சிகள் ஒப்பமிட்டுள்ளதாக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ.கோபாலகிருஸ்ணன் தெரிவித்தார்.


மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அலுவலகத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடல் மற்றும் அது தொடர்பான கலந்துரையாடலை அடுத்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி தமது கட்சி இணைந்து கொள்வது தொடர்பில் எமது கட்சியின் மத்திய குழு கூடி ஆராய்ந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

அத்துடன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள 3 கட்சிகள் தவிர, ஏனைய கட்சிகள் விரைவில் கைச்சாத்திடும் என்றும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் பின்னரும் கைச்சாத்திடமுடியும் என்று கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் மாகாணச் செயலாளர் சு.சிவரெத்தினம் தெரிவித்தார்.

நேற்றைய இச்சந்திப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி, கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் செ.கோபாலகிருஸ்ணன், ஒன்றியத்தின் தலைவர் பேராசிரியர் செல்வராஜா, அகில இலங்கை தமிழர் மகா சபையின் தலைவர் கலாநிதி கே.விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை, உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

#batticalo  #tamilnews  #news  #மட்டக்களப்பு  #கல்லடி  #வி.ஆனந்தசங்கரி   #சு.சிவரெத்தினம்   #செ.கோபாலகிருஸ்ணன்  #செல்வராஜா, #கே.விக்னேஸ்வரன்  #ஞா.கிருஸ்ணப்பிள்ளை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.