கோவாவில் உலக முதலீட்டாளர்கள்!

டிசம்பர் மாதத்தில் கோவாவில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு நடக்கவுள்ளதாக ஒன்றிய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
அக்டோபர் 21ஆம் தேதி கோவாவில் நடந்த குடைம் இண்டஸ்ட்ரியல்

எஸ்டேட்டின் பசுமை கட்டட மையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்டு சுரேஷ் பிரபு பேசுகையில், ”இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் நிதிப் பிரச்சினையும் ஒன்று. இந்திய ஸ்டார்ட் அப் துறையில் முதலீடு செய்ய உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 9ஆம் தேதி கோவாவில் நடைபெறுகிறது. இந்தத் துறையில் நடக்கும் முதல் நிகழ்வு இதுதான். கோவாவை ஸ்டார்ட் அப் மற்றும் லாஜிஸ்டிக் துறைகளின் மையமாக மாற்றும் முயற்சியில் உள்ளோம்.
இதன்மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும். வேளாண் ஏற்றுமதி மேம்படும். இங்குள்ள எல்லா விவசாயிகளும் பயனடைவார்கள். தோட்டக்கலை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். நான் ஏற்கெனவே ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளிடம் பேசியுள்ளேன். அவர்கள் இந்தியாவிலிருந்து வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய ஆர்வமாக உள்ளனர். லாஜிஸ்டிக் துறைகள் சார்ந்த பணிகளும் என்னுடைய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இந்தியாவுக்கான ஒருங்கிணைந்த லாஜிஸ்டிக் திட்டத்தை தயாரித்து வருகிறோம்”என்றார்.
Powered by Blogger.