இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர் 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.!

யுத்தம் காரணமாக இந்தியாவில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர் 30 பேர் நாடு திரும்பியுள்ளனர்.


குறித்த இலங்கை தமிழர் 30 பேரும் இன்று (திங்கட்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கினறன.

வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 குடும்பங்களைச் சேர்ந்த 30பேரே வருகை தந்துள்ளனர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று நாடு திரும்புகின்ற அனைத்து மக்களுக்கும் வேண்டிய அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படுமென இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் அகதிகளாக இருந்து நாடு திரும்புபவர்களின் எண்ணிக்கையும் அண்மைகாலமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#srilanka   #india  #tamilnews   #news  #இந்தியா  #வவுனியா #மன்னார் #யாழ்ப்பாணம் #கிளிநொச்சி

No comments

Powered by Blogger.