இணுவில் கோண்டாவிலுடன் இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – இணுவில் பிரதேசத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மௌனப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணுவில் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆரம்பிக்கப்பட்ட மௌன ஊர்வலம், உடுவில் பிரதேச செயலக அலுவலகத்தை சென்றடைந்து, உடுவில் பிரதேச செயலாளரிடம் மனு ஒன்றினை கையளித்தலுடன் நிறைவு பெற்றது.

இதன்போது அரசியல் சுயநலன்களுக்காக எல்லை மீள் நிர்ணயத்தின்போது, இணுவில் கிராமத்தின் இரு பகுதிகளை கோண்டாவிலுடன் இணைத்து தொன்மை மிகுந்த  இணுவிலை துண்டுபோடும் செயற்பாடுகளுக்கு சில புத்திஜிவிகள் திரைமறைவில் உதவி வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதேவேளை குறித்த விவகாரம் தொடர்பாக இணுவில் சிவகாமி அம்மன் மண்டபத்தில் நேற்று மக்கள் ஒன்றுகூடலொன்று நடைபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


#jafffna  #inuvil  #tamilnews #news #srilanka  #யாழ்ப்பாணம்  #இணுவில்  #மௌன ஊர்வலம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.