தோனி துடுப்பாட்டத்திற்க்கு பதில் சொன்ன கங்குலி!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் தோனியின் பேட்டிங் குறித்து முன்னாள் இந்திய வீரர் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.


இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நேற்று (அக்டோபர் 21) விளையாடியது. இந்தப் போட்டி கவுகாத்தியில் உள்ள பர்சபரா அரங்கத்தில் நடந்தது. இந்த ஆடுகளத்தில் நடக்கிற முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். அதனையொட்டி முன்னாள் இந்திய வீரர் சவ்ரவ் கங்குலி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

கலந்துகொண்ட அவர் பிடிஐ ஊடகத்திடம் தோனி பேட்டிங் குறித்து பேசுகையில், “நடக்கவுள்ள உலகக் கோப்பையில் தோனி நிச்சயம் சிறப்பாக விளையாடுவார். தோனியின் ஒட்டுமொத்தமான களச் செயல்பாடு சிறப்பாகவே இருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடந்துவரும் இந்தத் தொடர் அவருக்கு மிகவும் முக்கியமான தொடர்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்ந்தெடுத்துவருகிறார்கள். அதனால்தான் ரிஷப் பந்த் போன்றோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சிறந்த அணியாகவே இருக்கிறது. எனவே இந்த உலகக் கோப்பையை சிறப்பாக எதிர்கொள்ளும். இந்த உலகக் கோப்பை காண்போருக்கு நிச்சயம் சுவாரஸ்யமானதாக இருக்கும்” என்றார்.

தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகச் செயல்பட்டாலும் பேட்டிங்கில் அவ்வளவு சிறப்பான பங்களிப்பு எதையும் சமீபத்திய போட்டிகளில் வழங்கவில்லை. குறிப்பாக ஆசியக் கோப்பையில் நான்கு முறை களமிறங்கி 77 ரன்கள் மட்டுமே சேர்த்த தோனி, இந்த ஆண்டில் 10 முறை பேட்டிங் செய்து சராசரியாக 28.12 ரன்களையே அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் 67.36 ஆகவே உள்ளது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.