ஹெச். ராஜாவின் சில சர்ச்சை பேச்சுகளின் தொகுப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தையும் காவல் துறையையும் கொச்சையான வார்த்தைகளில் இழிவாக விமர்சித்த வழக்கில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதையடுத்து அவர் மீது உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து தொடர்ந்த அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஹெச். ராஜா பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலும், சமூக வலைதளங்களில் பதிவிட்டாலும் அது சர்ச்சையாக வெடித்துக் கொண்டிருக்கிறது. அவரின் பேச்சு தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

ஹெச். ராஜாவின் சில சர்ச்சை பேச்சுகளின் தொகுப்பு

தீவிரவாதி ‘அய்யாகண்ணு’ ( ஏப்ரல் 29, 2017)

டெல்லியில் அய்யாகண்ணு போராட்டம் நடத்திய போது அவருடன் அப்சல் குரு கூட்டாளியான ஒரு தீவிரவாதி உடன் இருந்திருக்கிறார். அய்யாக்கண்ணு கூட்டத்துக்கும் அப்சல் குருவுக்கும் என்ன தொடர்பு? இது தொடர்பாக உரிய விசாரணை நடத்திய அய்யாகண்ணுவை கைது செய்ய வேண்டும்.

ஆண்டாள் விவகாரம் (ஜனவரி 8,2018)

யாரோ ஒருத்தர் கவிப்பேரரசா? பேரு என்ன? டைமண்ட் பேர்ல்னு சொல்றான் நம்ம ஆள். வைரமுத்துவாம்... அவரைப் பார்த்தாலே கண்ணு ரெண்டும் செக்கச் செவேர்னு பிதுங்கி இருக்கிறதை பார்த்தாலே இவரு என்ன கவிஞர்? பின்னாடி இருந்து கஞ்சா கவிஞன்னு சொல்லக் கூடாது. அவரு சொல்றாரு ஆண்டாள் பெரியாழ்வாருக்குப் பிறக்கவில்லை. வைரமுத்துவை அவங்க ஆத்தா பெத்தது 7-ம் நூற்றாண்டாம்! ஆண்டாளின் அம்மாவுக்கு பிரசவம் பார்த்தது வைரமுத்துவின் ஆத்தாவா?

என்ன வாய்க்கொழுப்பு? இந்துமதத்தை இழிவாகப் பேசிய வைரமுத்து உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் இந்துக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியதிருக்கும். மானங்கெட்ட கூட்டம் இந்த தமிழ்நாட்டில் இதே மாதிரி விபச்சாரிகள் எல்லாம் தமிழ் என்ற முகவரியை வைத்துக் கொண்டு இந்துக்களை, இந்து கடவுள்களை அசிங்கப்படுத்துகிற ஏளனப்படுத்துகிற பேச்சு தைரியத்தை எவன்டா கொடுத்தது? முகமது நபியைப் பற்றி அவரது 9 மனைவிகளைப் பற்றி பேசியிருந்தால் வைரமுத்துவின் தலை இந்த நேரம் உருண்டிருக்குமா இல்லையா?

நாம மானங்கெட்டுப் போனதால் வெட்டிப் பய வைரமுத்து பேசியிருக்கான். நீ எப்படிடா ஆண்டாள் தாய் பற்றி பேசுவ? மானங்கெட்டவனே மன்னிப்பு கேள்! நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தா இப்படி பேசியிருப்பியா? பொண்டாட்டியை கவிதை எழுத சொல்லி அதை வியாபாரம் செய்கிற மானங்கெட்ட நபர் நீ.

பெரியார் சிலை (மார்ச் 6, 2018)

லெனின் யார் அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு?கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. லெனின் சிலை உடைக்கப்பட்டது. திரிபுராவில் இன்று லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை

(இந்த கருத்தை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்கிவிட்டு அட்மின் போட்டது என விளக்கம் கொடுத்தார் எச். ராஜா).

தமிழை அழித்த ஈ.வே.ரா (மார்ச் 8, 2018)

தமிழ் மொழியே இருக்கக்கூடாது என்பதற்காக தமிழர் மீது திணிக்கப்பட்டதே திராவிடம். தமிழை அழிப்பதற்காகத்தான் திராவிடம் என்ற சொல்லை கொண்டு வந்தவர் ஈ. வே.ரா. தமிழ் என்ற சனியனே இருக்கக்கூடாது என பேசியவர் ஈ.வே.ரா. அவர் பேசியதற்கு ஆதாரம் இருக்கிறது. இந்த உண்மையை மக்களிடம் எடுத்துச் சென்றதால் தான் வசைபாடுகிறார்கள்,

கனிமொழி விவகாரம் (ஏப்ரல் 18, 2018)

தன் கள்ள உறவில் பெற்றெடுத்த கள்ளக் குழந்தையை (illegitimate child) மாநிலங்களவை உறுப்பினராக்கிய தலைவரிடம் ஆளுநரிடம் கேட்டது போல் நிருபர்கள் கேள்வி கேட்பார்களா. மாட்டார்கள். சிதம்பரம் உதயகுமார், அண்ணாநகர் ரமேஷ், பெரம்பலூர் சாதிக் பாட்ஷா நினைவு வந்து பயமுறுத்துமே.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு (மே 22, 2018)

போராட்டம் கலவரமாக மாறும் போது வேறு வழி இல்லை

ராமேஸ்வரம் ஆயுத குவியல் (ஜூன் 26, 2018)

இராமேஸ்வரத்தில் அந்தோணியார்புரத்தில் எடிசன் என்பவர் வீட்டில் தோண்டத் தோண்ட நவீன ஆயுதங்கள். தூத்துக்குடியில் நடந்தது நக்சல், சர்ச் கூட்டணியின் பரிமாணம். அது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதன் பின்னணியில் உள்ள "வந்தேறி மாடுகள்" உடனடியாக அடையாளம் காணப்படவேண்டும். உளவுத்துறைக்கு சவால்

ஜல்லிக்கட்டு ( செப்டம்பர் 17, 2018)

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு சென்ற நம் கட்சி பெண் நிர்வாகி ஒருவர் எனக்கு போன் செய்து பேசினார். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த சில விஷயங்களை ஊடகங்கள் மறைத்துவிட்டன என அவர் கூறினார். ஜல்லிக்கட்டு போராட்டம் புரட்சி அல்ல அது, மது, மாது, பீஃப் என ஆறாக ஓடியது என கூறினார். அங்கு சேலை கட்டிய பெண்களுக்கு அனுமதி இல்லை. ஜீன்ஸ் பேண்ட் போட்ட பெண்களுக்கே அனுமதி என்றும் அந்த பெண்மணி கூறினார்

ஆமை புகுந்த வீடும் அறநிலையத் துறை புகுந்த கோயிலும் உருப்படாது. தமிழகத்தில் 5% கோயில்கள் இடிக்கப்பட்டு கட்டங்கள் ஆக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் தீய சக்திகள் தூண்டுதலால் தான் நடக்கிறது. சீமான், திருமுருகன் காந்தி இவர்கள் மூலமாக தமிழகத்தை இந்தியாவில் இருந்து பிரிக்க அந்நிய சக்திகள் ஊடுருவியிருக்கின்றன. 99 நாள்கள் அமைதியாக நடந்த தூத்துக்குடி போராட்டத்தில் நூறாவது நாள், எப்படி கலவரம் வெடித்தது. இதன் பின்னணியில் அமெரிக்க சதி இருக்கிறது

ஐயப்பன் கோவில் (அக்டோபர் 20, 2018)

கேரளாவில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவால் இந்துக்கள் எழுச்சியாக போராடி வருகின்றனர். அங்குள்ள போலீஸ் பக்தர்கள் மீதும், பொதுமக்கள், பெண்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர்.

கேரளாவில் இந்துவிரோத கம்யூனிஸ்ட் அரசு செயல்படுகிறது. பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியற்காக பினராய் விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும். மதநம்பிக்கை இல்லாதவர்களுக்கு சபரிமலையில் என்ன வேலை?. கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரும் வரை, சபரிமலை பிரச்னைக்கு தீர்வு வராது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.