ஆறுமுகசாமி ஆணையகத்தின் ஆயுட்காலம் நீடிப்பு

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையகத்தின் ஆயுட்காலம் மேலும் 4 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.


குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் கடந்த டிசம்பர் 24 -ஆம் திகதியில் இருந்து 6 மாத காலத்துக்கு, அதாவது 2018 -ஆம் ஆண்டு ஜூன் 24 -ஆம் திகதி வரை கால அவகாசத்தை நீடித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பின்னர் மேலும் 4 மாத கால நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில், அந்த காலத்திற்குள் விசாரணைகள் நிறைவடையவில்லை.

இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மேலும் பலரை விசாரிக்க வேண்டி உள்ளதால் கால நீடிப்பு வழங்க வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையம் கேட்டுக்கொண்டது.

இதனை ஏற்ற அரசு, விசாரணை ஆணையகத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், 4 மாதத்திற்குள் ஆணையகம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.