ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட்-முதல் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 255/3

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் இமாம்-உல்-ஹக் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களான களம் இறங்கினர்.
இருவரும் சிறப்பாக ஆடி விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.
முகமது ஹபீஸ் 172 பந்தில் 12 பவுண்டரியுடன் தனது 10-வது சதத்தை பூர்த்தி செய்தார். தேனீர் இடைவேளை முடிந்ததும்,
இமாம்-உல்-ஹக் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து முகமது ஹபீசும் 126 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து இறங்கிய அசார் அலி 18 ரன்னில் வெளியேறினார்.

இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. ஐரிஸ் சொகைல் 15 ரன்னும், மொகமது அப்பஸ் ஒரு ரன்னிலும் அவுட்டாகாமல் உள்ளனர்.

#PAKvAUS | #டெஸ்ட் #| #முகமது ஹபீஸ் | #இமாம் உல் ஹக்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.