ஈரானில் பலத்த மழை, வெள்ளம் - 7 பேர் பலி!

ஈரான் நாட்டில் கடந்த 5-ந் தேதியில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. மஜந்தரன், கிலான், கோலஸ்டான் மாகாணங்களில் இந்த மழை, வெள்ளத்தால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகள், பாலங்கள், வீடுகள் பலத்த சேதம் அடைந்தன.வெள்ளத்தில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. மின்வினியோகம் தடைபட்டுள்ளது. கியாஸ் வினியோகம் பாதித்துள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப்போயுள்ளது. இந்த மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் 7 பேர் உயிரிழந்தனர்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்து வருவதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் முழுவீச்சில் ஈடுபடுவதற்கு குழுக்களை ஈரான் மீட்பு மற்றும் நிவாரண அமைப்பு அனுப்பி வைத்துள்ளது.

#Iran #Flood 


No comments

Powered by Blogger.