இந்தியாவில் மெட்ரோ ரயில் உற்பத்தி!

மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவில் முதன்முதலாக மெட்ரோ ரயில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசு தரப்பு அறிக்கையில், ‘இந்தியாவில் இதுவரையில் மெட்ரோ ரயில்கள் உற்பத்தி செய்யப்பட்டதில்லை. தற்போதுமேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலியில் மெட்ரோ ரயில் உற்பத்திக்கான ஆலை அமைக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி ரோபோக்களின் உதவியோடு இங்கு ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. கனடா நாட்டின் தயாரிப்புகளுக்கு இணையான தரத்தில் இந்தியாவில் மெட்ரோ ரயில்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளன.

முதன்முறையாக 
உள்நாட்டில் தயாரிப்பதால் சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வாங்குவதைக் காட்டிலும் 40 விழுக்காடு குறைவான செலவில் இங்கு தயாரிக்கலாம். இந்த மெட்ரோ ரயில்கள் வைஃபை, சிசிடிவி கேமராக்கள், மொபைல் போன் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்படவுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சிக்னல் வசதிகள், டோர் கண்ட்ரோல் வசதிகள், மேலாண்மை அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ரயில்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே வாரிய உறுப்பினர் ராஜேஷ் அகர்வால் பிசினஸ் டுடே ஊடகத்திடம் பேசுகையில், “இதுவரையில் இரண்டு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. 2 மெட்ரோ ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்க மகாராஷ்டிர அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. 8 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொரு பெட்டியும் தயாரிக்கப்படவுள்ளது. தற்போது 8 மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரிக்கவுள்ளோம். இதையே சீனாவிலிருந்து வாங்கினால் ஒன்றின் விலை ரூ.12 கோடியாக இருக்கும்” என்றார்

No comments

Powered by Blogger.