ந.முத்துசாமி: கமல் இரங்கல்!

கூத்துப்பட்டறை ந. முத்துசாமியின் மறைவுக்கு கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.


கூத்துப்பட்டறை நிறுவனர் ந. முத்துசாமி இன்று உடல்நலக் குறைவால் காலமானார். இவர் பல்வேறு கலைஞர்களின் பிதாமகனாக இருந்துள்ளார். நாசர், தலைவாசல் விஜய், கலைராணி, விஜய் சேதுபதி, விமல், வித்தார்த், பாபி சிம்ஹா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை உருவாக்கியவர்.

இவரது மறைவுக்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் செய்தியை வீடியோ மூலமாக பதிவு செய்துள்ளார். அதில், “சில தனிமனிதர்களின் இழப்பை ஒரு தலைமுறையுடன்தான் ஈடு செய்ய வேண்டும்,. அப்படிப்பட்ட முக்கியமான ஈடு இணையற்ற சாதனையாளர். கூத்து உலகிற்கும் நாடக உலகிற்கும் தூரத்து உறவாக சினிமாவுக்கும் அவர் பயன்பட்டுள்ளார் என்பதுதான் உண்மை. பல நடிகர்கள் அங்கிருந்து பயிற்சி பெற்று சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். அந்த அளவில் அவர் வீச்சு பல்துறை வித்தகராக மாற்றி வைத்திருந்தது. இன்று அவர் ஒரு ஆள் செய்த வேலையை ஒரு தலைமுறை செய்யக் கடமைப்பட்டிருக்கிறது. அவர் இருந்த போது செய்த வேலைக்கு கலைஞனாக நன்றி...” என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.