கிளிநொச்சியில் மக்களுக்கு உதவாத இராசநாயகம் நினைவாக பேருந்து தரிப்பிடமாம்??

கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் மகாதேவ ஆச்சிரம முன்னாள் தலைவருமான மறைந்த இராசநாயகம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரால்  பூநகரியில் புதிய பஸ் தரிப்பு நிலையமொன்று அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


மகாதேவ ஆச்ரிமத்தின் ஸ்தாபகத் தலைவராக இருந்த இராசநாயகம் சுகயீனம் காரணமாக கடந்த வருடம் உயிரிழந்திருந்தார். இதனையடுத்து அந்த ஆச்சிரமத்திற்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டு ஆச்சிரமப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அவரது ஓராண்டு நினைவு தினம் அண்மையில் நடைபெற்றது.

இந் நிலையில் ஓராண்டு நினைவாக சுமார் ஐந்து இலட்சம் ருபா செலவில் அவர் பிறந்த மண்ணான பூநகரில் அவரது குடும்பத்தினர் பதிய பஸ் தரிப்பிடமொன்றை அமைத்தனர். பூநகரி சுனாமியடிச் சந்தியில் அமைக்கப்பட்ட இந்த பஸ் தரிப்பிடத்தை இன்று வெள்ளிக்கிழமை அவரது மனைவி நாடாவெட்டித் திறந்து வைத்து பொது மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமான பூநகரிப் பிரதேசத்தில் குறித்த இடத்தில் பஸ் தரிப்பு நிலையம் இல்லாததால் அப் பகுதி மக்கள் பல்வேறு கஸ்ர துன்பங்களை எதிர்நோக்கி வந்திருந்தனர். இதற்கமையவே தந்தையின் நினைவாக பிள்ளைகளின் உதவியுடன் புதிய பஸ் தரிப்பிடம் அமைக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை தந்தையாரின் மகாதேவ ஆச்சிரமத்திற்கு அவரது குடும்பத்தினரும் பல்வேறு உதவிகளை ஏற்கனவே வழங்கியிருக்கின்ற நிலைமையிலையே தந்தையின் நினைவாக பூநகரியில் புதிய பஸ் தரிப்பு நிலையத்தை அமைத்து கொடுத்துள்ளனர். இதே போன்று அப் பகுதியில் தங்களால் இயன்ற ஏனைய உதவிகளையும் செய்து கொடுப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.