மூடிய அறைக்குள் ரணிலின் முக்கியஸ்த்தர்கள்!

அலரி மாளிகையில் விசேட கூட்டமொன்று தற்பொழுது நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அலரி மாளிகையில் விசேட கூட்டமொன்று தற்பொழுது நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அஜித் பெரேரா, ஹர்ஸ டி சில்வா, டிம்.சுவாமிநாதன்,விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் தற்பொழுது அலரி மாளிகை நோக்கிப் பயணிக்கின்றனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்பொழுது காலியிலிருந்து அலரி மாளிகை நோக்கி வருகை தர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பை அண்டிய பகுதியைச் சேர்ந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அலரி மாளிகையை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, அலரி மாளிகையை அண்டிய பிரதேசத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் தற்போதைய நிலைமைகள் குறித்து பேசப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

#colombo  #Ranil  #sarth ponsega  #suvaminathan #vijiyakala    #ajith pera  #harsadesilva  #tamilnews #srilanka
Powered by Blogger.