தமிழின படுகொலையாளி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சற்றுமுன்னர் பதவியேற்பு!(காணொளி)

இலங்கையில் சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ  பிரதமராக சத்தியப் பிரமானம் செய்துள்ளார். இச் சத்திய பிரமானம் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதியேற்றபோது அங்கு நல்லாட்சியில் இருந்து விலகிய 16 பேர் கொண்ட உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை தனது நன்பனுக்கு சம்பந்தன் வாழ்த்துக்களை வழங்கியுள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பிலும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளது.
குறித்த அறிவிப்பினை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
மேலும் விலகுவது குறித்த கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே முன்னாள் ரனில் விக்கிரமசிங்க  நிலை குறித்து பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.