கொழும்பில் வன்முறை வெடித்தது(காணொளி)

விடுதலைப் புலிகள் கட்டமைப்பை உடைக்க மிகப் பெரிய முயற்சி கொண்டு கருணாவை பிளவுபடுத்துவதில் வெற்றி கொண்டவர் ரணில்.

பின்னர் ராஜ தந்திர நகர்வாக பேச்சுவார்த்தை பேச்சு வார்த்தை என இழுத்தடித்து அந்த காலப் பகுதியில் மேலும் புலிகள் கட்டமைப்பை சிதைக்க முயன்றவர் ரணில். மகிந்த ஜனாதிபதி ஆகிய பின்னர் ரணில் தனது ஆட்சியில் போட்ட சூழ்சி இன அழிப்பு அத்திவாரத்தை கட்டடம் ஆக்கி "கோம்பை நக்கின காரணத்துக்காக இள நீர் குடிச்சவனான..." பட்டம் பெற்று மகிந்த "இன அழிப்பு துரோகி" என வாகை சூட ரணில் நரித் தந்திரத்தால் தப்பித்தவர்
பின்னர் மைத்திரியை நரித் தந்திரத்தால் மகிந்த பக்கம் இருந்து உடைத்து ஜனாதிபதி மோகம் ஊட்டி ஜனாதிபதி ஆகினவர். காரணம் தன்னால் ஜனாதிபதி வேட்பாளர் ஆக களம் இறங்கி வெல்ல முடியாது என நன்கு உணர்தவர்.
பின்னர் மைத்திரி ஆதரவில் பிரதம மந்திரி பதவியை கையகப்படுத்தியவர் ரணில்.
தமிழ் மக்களுக்கு ரணில் செய்த துரோகம் பல உண்டு. ஆனால் இன்று மைத்திரியின் துரோகத்தால் வீழ்ந்தவர் ரணில். இனி ரணில் மீண்டு எழுவாரா?

No comments

Powered by Blogger.