துன்னாலையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை !

யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலைப் பகுதியில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் இன்று காலை முற்றுகையிடப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். ஆண் ஒருவர் தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கிருந்து 115 லீற்றர் கோடா, 10 லீற்றர் கசிப்பு மற்றும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#யாழ்ப்பாணம்   #பொலிஸார்   #கசிப்பு  #வடமராட்சி  #துன்னாலை   #jaffna  #thunnalai  #srilanka

No comments

Powered by Blogger.