லண்டனில் விபத்தில் சிக்கிய பிரபல நடிகையின் கணவர்!

விஜய் நடித்த சச்சின் படத்தில் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தவர் பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசு. இவர் நடிகர் கரண் சிங் என்பவரை ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.


இந்த ஜோடி ஒன்றாகவே ஒரு படத்தில் நடித்து வந்தனர்.

Aadat என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சில நாட்கள் முன்பு ஸ்டண்ட் ஷூட்டிங்கின்போது கரண் சிங் விபத்தில் சிக்கியுள்ளார். அதனால் அவரது காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை spiral tibial fracture என கண்டறிந்து அன்று இரவே அறுவைசிகிச்சை செய்துள்ளனர். இதனால் படத்தின் ஷூட்டிங் சில வாரங்கள் தள்ளி போகும் என்று கூறப்படுகிறது.

#india   #Tamilnadu #Tamilnews  #tamilarul.net   #Tamil #Cinema News
#செய்திகள், #சினிமா  #இந்தியா

No comments

Powered by Blogger.