ரொமிலா தாப்பரின் சீராய்வு மனு நிராகரிப்பு!

மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு போலீஸ்காவலிலும் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டுள்ள 5 மனித உரிமைப்போராளிகளை விடுதலை

செய்யக்கோரிய ரொமிலா தாப்பரின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.. அந்த செய்தியானது இன்று(அக்-26) உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் வெளியானது .

பீமா-கோரகான் வெடிகுண்டு சம்பவத்திலும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்துடனும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் 5 மனித உரிமைப்போராளிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரும் உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

கவிஞர் வர வர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பத்திரிகையாளரும் சமூகச் செயல்பாட்டாளருமான கௌதம் நவ்லகா, அருண் பெராரியா, கன்சால்வ்ஸ் ஆகிய 5 மனித உரிமைப் போராளிகளின் மீதான வழக்குகளை ரத்து செய்து இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரி சீராய்வு மனு ஒன்றை வரலாற்று நிபுணர் ரொமிலா தாப்பர் தாக்கல் செய்திருந்தார்.

சீராய்வு மனு மீதான விசாரணையானது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் ஏஎம்.கான்வில்கர் மற்றும் டிஒய்.சந்திரசௌத் ஆகியோர் முன்னிலையில் நேற்று (அக்-26)நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், நாங்கள் சீராய்வு மனுவை பரிசீலித்தோம். செப்டம்பர் 28 ஆம்தேதி அளித்த தீர்ப்பை பரிசீலனை செய்வதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்பதால் மனுவானது நிராகரிக்கப்படுகிறது எனத் தெரிவித்தனர்.
#Tamilnews  #Tamil  #india   #Tamilnadu   #Tamilarul.net

No comments

Powered by Blogger.