ஐக்கிய தேசியக் கட்சியின் 20 எம்.பிக்கள் மஹிந்தவிற்கு ஆதரவாம்?

கூட்டப்பட்ட பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளிப்பார்கள் என

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் சம்பந்தப்பட்ட அந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணைப்பு நடவடிக்கைகளை, தானே மேற்கொண்டதாகவும் ஆனந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான ஆனந்த அளுத்கமகே, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று மகிந்த தரப்புடன் இணைந்து கொண்டார்.

ஆனந்த அளுத்கமகே, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

No comments

Powered by Blogger.