கால்பந்து ரசிகர்களைக் குறிவைக்கும் காளிதாஸ்!

கேரளாவில் மற்ற விளையாட்டுக்களை விட கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் புதிய படம் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகிவருகிறது.

மிதுன் மனுவேல் தாமஸ் இயக்கும் இந்த மலையாளப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘அர்ஜெண்டினா ஃபேன்ஸ் காட்டூர்கதவு’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குநர் மிதுன் மனுவேல் தனது ஃபேஸ்புக் பதிவில் “இந்த படம் அர்ஜெண்டினா ரசிகர்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த கால்பந்து விளையாட்டு ரசிகர்களுக்கானது. 
கால்பந்து வீரர்களும் இதில் நடிக்கின்றனர்” என்று கூறியுள்ளார். ஆஷிக் உஸ்மான் இந்த படத்தை தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
காளிதாஸுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார். பகத் ஃபாசில் நடித்த வரதன் திரைப்படத்தில் நடித்து ஐஸ்வர்யா லெட்சுமி ஏற்கெனவே கவனம் பெற்றிருந்தார்.காளிதாஸ் மீன்குழம்பும் மண்பானையும் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். தற்போது பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துவருகிறார். இதுதவிர தரணிதரன் இயக்கத்தில் மேகா ஆகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ள படம் வெளியீட்டுக்குத் தயாராகிவருகிறது. நேரம், பிரமேம் ஆகிய படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்திலும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.