வர்த்தகத்தில் நெருங்கும் இந்தியா-சீனா!


இந்தியாவிலிருந்து இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.


அக்டோபர் 26ஆம் தேதியன்று டெல்லியில் இந்திய தொழில் துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வர்த்தகத் துறை அமைச்சரான சுரேஷ் பிரபு கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “உலகளவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்திய ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. நவம்பர் மாதத்தில் சீன அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவர். முக்கியமாக இந்திய ஏற்றுமதியாளர்களைச் சந்தித்து அவர்களது சந்தை அணுகுமுறை, வர்த்தக ஒழுங்குமுறை குறித்த பிரச்சினைகள் பற்றி சீன அதிகாரிகள் கேட்டறியவுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை மற்ற அனைத்து நாடுகளை விடவும் உயர்வாக உள்ளது. சீனாவிலிருந்து மின்னணு பொருட்கள் உள்பட ஏராளமான சரக்குகள் இந்தியாவுக்குள் வருகிறது. இந்தியாவுக்கும், சீனாவுக்குமான வர்த்தகத்தில் நிலவும் இடைவெளியைக் குறைப்பதற்காக அரிசி மற்றும் கடுகு ஏற்றுமதியை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ஆகையால், சர்வதேச வர்த்தகப் போரால் இந்தியாவுக்கான வாய்ப்புகள் உயர்ந்துகொண்டே போகிறது.
#Tamilnews  #Tamil  #india   #Tamilnadu   #Tamilarul.net

No comments

Powered by Blogger.