பாதுகாப்பு செயலாளராக கோதா பதவியேற்பா?

பிரதமராக மகிந்த ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளராக மீண்டும் கோதாபய ராஜபக்‌ஷ நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அவ்வாறான தகவல்களில் உண்மையில்லையென கோதாபய ராஜபக்‌ஷவின் ஊடக பேச்சாளரான மிலிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.


தனது டுவிற்றர் கணக்கில் அவர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் எந்த பதவியையும் கோதாபய ராஜபக்‌ஷ பொறுபேற்க மாட்டார் எனவும் நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்காக மகிந்த ராஜபக்‌ஷவுக்கு தேவையான உதவிகளை அவர் வழங்குவார் எனவும் டுவிற்றரில் தெரிவித்துள்ளார்.

#Tamilnews  #Tamil  #Srilanka  #Colombo   #Tamilarul.net   #Twiter  #கோதாபய #ராஜபக்‌ஷ  
Powered by Blogger.