இலங்கைக்குள் சர்வதேசம்

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன
மகிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்த விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் தூதுவர்களை அவசரமாக சந்தித்து கலந்துரையாடுகின்ற அதே வேளை சீன தூதுவர் இரண்டாவது பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்து சீன ஜனாதிபதியின் வாழ்த்துக்களை தெரிவித்து கலந்துரையாடியிருக்கின்றார். அத்தோடு ரணிலையும் சந்தித்திருக்கின்றார்.

இதனை தவிர அமெரிக்கா,இந்தியா என்பனவும் மாறி மாறி இரண்டு  தரப்புக்களுடனும் தொடர்புகளை மேற்கொண்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதிக கவனம் செலுத்தியுள்ளதோடு, அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.
மேலும் அமெரிக்கா தனது சிரேஸ்ட அதிகாரி ஒருவரை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

இப்படி சர்வதேச நாடுகள் ஓடித்திரிகின்றன.

இவற்றையெல்லாம் நோக்கும் போது இலங்கையில் நிலவுவது  இலங்கை ஆட்சியல்ல என்பதே. இலங்கையில் சர்வதேசம் எந்தளவுக்கு மூக்கை  நுழைத்துள்ளது என்பதே.

No comments

Powered by Blogger.