மலையகத்தை சேர்ந்த மேலும் சில எம்.பிக்கள் மகிந்த பக்கம் தாவ திட்டம்?

மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் சில தமிழ் எம்.பிக்கள் புதிய பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை ஆதரித்து அந்த பக்கத்திற்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


ஏற்கனவே ஐக்கிய தேசிய கட்சியின் எம்.பியான வடிவேல் சுரேஷ் மகிந்த பக்கம் தாவியுள்ள நிலையில் மேலும் இரண்டு தமிழ் எம்.பிக்களை தம் பக்கம் இழுக்க மகிந்த தரப்பினரால் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் மூவருக்கும் பிரதி அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு மலையகத்துடன் தொடர்புடைய அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 
Powered by Blogger.