கைக் குண்டுடன் இரு நபர்கள் கைது

இங்கிரிய நகரில் கைக் குண்டுடன் இரு நபர்கள் இன்று(29) கைது செய்யப்பட்டுள்ளனர் என இங்கிரிய பொலிசார் தெரிவிக்கின்றனர்.


கைது செய்ய சுற்றிவளைக்கப்பட்ட வேலை சந்தேக நபர்களில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைதான சந்தேக நபர்கள் அகலவத்தை, பத்பெரிய பிரதேசத்தினை சேர்ந்த 28 மற்றும் 36 வயதுடையோர் என தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்கள் இன்று(29) ஹொரனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

No comments

Powered by Blogger.