பாடசாலை கல்வியே காரணம் – கிளிநொச்சியில் முதல் நிலை பெற்ற மாணவன் தேனுசன்

புலமைப்பரிசில் பரீட்சையில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுக்கொண்ட கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவனான தேனுசனிற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மிக வறிய குடும்பத்தில் பிறந்த தேனுசன் பாடசாலை கல்வியை மாத்திரமே நம்பி தனது கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.
இந்தநிலையில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியான புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் 196 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதிதியில் முதன் நிலையை பெற்றுள்ளார்.
ஏனைய மாணவர்களைப் போன்று பிரபலமான கல்வி நிலையங்கள், மேலதிக வகுப்புக்களிற்கு செல்லாது பாடசாலை கல்வியை நம்பி மாத்திரமே இந்த பெறுபேற்றினை பெற்றுள்ளமை தொடர்பில் பாடசாலை முதல்வர் ஜெயந்தி தனபாலசிங்கம் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.