தேர்தல்களை அரசாங்கம் வேண்டும் என்றே பிற்போடுகின்றது – கீர்த்தி தென்னக்கோன்

தேர்தல்களை அரசாங்கம் வேண்டும் என்றே பிற்போட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கீர்த்தி தென்னக்கோன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
உரிய காலத்தில் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கிழக்கு, சப்ரகமுவ, வட மத்திய மாகாணங்களுக்கான சபைகள், ஏற்கெனவே தமது காலத்தை முடித்துள்ள நிலையில், வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளின் கால எல்லையும் எதிர்வரும் 28ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதன்காரணமாக 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகள், எதிர்வரும் 28ஆம் திகதியிலிருந்து இயங்காது’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.