சபரிமலைக்கு அனைத்து மதத்தினரும் செல்லலாம்?

சபரிமலைக்கு அனைத்து மதங்களின் பக்தர்களும் செல்லலாம் என கேரள உயர்நீதிமன்றம்  (அக்-29) தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த டிஜி. மோகன்தாஸ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் இந்து மதத்தினரைத் தவிர வேறு மதத்தினர் சபரிமலைக்கு வருவதைத் தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார்.



இந்த வழக்கின் விசாரணையானது இன்று நடைபெற்றது. அந்த வழக்கு மனுவில், கேரள இந்து பொது வழிப்பாட்டுத் தலங்கள் சட்டம் 1965 ஆனது, இந்து கோவில்களில் இந்துக்களைத் தவிர மற்ற மதத்தினர் நுழைவதைத் தடை செய்கிறது. அதன்படி மற்ற மதத்தினர் இந்துக் கோயில்களில் நுழைவதை தடை செய்ய வேண்டும். அதே போல உச்ச நீதிமன்றம் சபரிமலையில் பெண்களை அனுமதித்து தீர்ப்பளித்த பின்னர், இந்து அல்லாத ஒரு பெண்ணும் சிலை வழிபாட்டில் நம்பிக்கையில்லாதவர்களும் எப்படி போலீசாரால் அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறித்தும் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இவ்வழக்கு மனுவானது, இந்திய அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ளது என்று அதிருப்தி தெரிவித்த நீதிமன்றம், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளி வைத்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.