ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி மைத்திரிபால சிறிசேனவை சந்திப்பு!

ஐக்கிய நாடுகளின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதி ஹனா இன்று(31) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதிநிதி ஹனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளதோடு, அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்பின் பிரகாரமே என விவரித்துள்ளார்.

அவ்வாறே, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாத்து ஜனநாயகம் என்ற ரீதியில் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதாக தெரிவித்திருந்த ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றமையையும் நினைவு கூர்ந்தார்.
#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net

No comments

Powered by Blogger.