ஜப்பானில் இலங்கையர் ஒருவர் கைது!

இலங்கை நபர் ஒருவர் ஜப்பான் நாட்டில்  போக்குவரத்து விதிகளை மீறி பயணித்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


மோட்டார் வாகனம் ஒன்றை திருடியமை, போக்குவரத்து விதிகளை மீறியமை மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த நபர் அனுமதியற்ற விதத்தில் மோட்டார் வாகனம் ஒன்றை எடுத்து குடி போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறித்த நபரை பின்தொடர்ந்து சென்ற போது போக்குவரத்து விதிகளை மீறி பயணித்ததுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது ஏற்பட்ட விபத்துக்களில் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

43 வயதுடைய நபர் ஒருவரே ஜப்பான், புகுவோக பொலிஸாரினால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments

Powered by Blogger.