நாளை ஶ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்!

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நாளை (01) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறவுள்ளதாக குறித்த கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ தெரிவித்துள்ளார்.


இந்தக் கூட்டத்தில், நிகழ்கால அரசியல் சூழ்நிலை தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளதோடு, கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மற்றும் புதிய அமைப்பாளர்களை நியமித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் மத்திய செயற்குழு கூட்டத்தில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
Powered by Blogger.