கல­வ­ரங்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த இரா­ணு­வம் உதவி !

தற்­போ­தைய சூழ்­நி­லை­ யில் நாட்­டில் கல­வ­ரங்­கள் ஏற்­பட்­டால் அத­னைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ரும், பொலிஸ் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரும் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள். அவர்­க­ளால் அந்­தக் கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்டு இரா­ணு­வத்­தின் உத­வியைக் கோரி­னால் மாத்­தி­ரமே இரா­ணு­வம் அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கும். இவ்­வாறு இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க தெரி­வித்­தார்.


இது தொடர்­பில் அவர் நேற்று விடுத்­துள்ள ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த 26 ஆம் திகதி நாட்­டில் ஏற்­பட்ட மாற்­றம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்­கி­டை­யே­யான அர­சி­யல் மாற்­ற­மா­கும். ஆகை­யி­னால் அர­சி­யல் பிரச்­சி­னைக்கு தீர்வு காண்­பது இரா­ணு­வத்­தின் பொறுப்­பல்ல. இன, மத, பேத­மின்றி உயிர்­க­ளை­யும், உட­மை­க­ளை­யும் பாது­காப்­பது இரா­ணு­வத்­தின் பொறுப்பு.

தற்­போ­தைய சூழ்­நி­லை­ யில் நாட்­டில் கல­வ­ரங்­கள் ஏற்­பட்­டால் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பொலி­ஸா­ரும், பொலிஸ் சிறப்பு படை­யி­ன­ரும் நட­வ­டிக்கை எடுப்­பார்­கள். அவர்­க­ளால் அந்­தக் கல­வ­ரத்தை கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நிலை ஏற்­பட்டு இரா­ணு­வத்­தின் உத­வியை கோரி­னால் மாத்­தி­ரமே இலங்கை இரா­ணு­வம் அவர்­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கும்.

அவ­சர நிலைமை ஏற்­பட்­டால் கல­வ­ரங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு ஆகக் குறைந்த அதி­கா­ரத்தை இரா­ணு­வத்­தி­னர் பயன்­ப­டுத்த வேண்­டும். அதற்­கு­ரிய உப­க­ர­ணங்­களை படை­யி­னர் தம் வசம் வைத்­தி­ருக்க வேண்­டும் – என்­றுள்­ளது. 

No comments

Powered by Blogger.