சர்கார் படக்குழுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் எச்சரிக்கை

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் `சர்கார்’. அரசியலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகி பாபு, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். சர்கார் அரசியல் தொடர்பான படம் என்பதால் இது தொடர்பான வி‌ஷயங்கள் வெளியில் கசியாமல் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் ’அன்பான `சர்கார்’ படக்குழுவினரே இந்தப் படத்தை உருவாக்குவதற்காக பலர் கடுமையாக உழைத்துள்ளனர்.
நேர்காணல் என்ற பெயரில் பல ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் படம் தொடர்பான தகவல்களை வெளியில் தெரிவித்து வருகின்றனர். இது பிற்காலத்தில் தொடர்ந்தால் அவர்கள் மீது எந்தப் பாரபட்சமுமின்றி சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என கடுமையாக எச்சரித்துள்ளார். 

No comments

Powered by Blogger.