வல்வெட்டித்துறையில் பெரிய அணக்கொண்டாக்கள்??மக்கள் பதற்றம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளான குமரப்பா மற்றும் புலேந்திரன் ஆகியோருக்கு புதிய நினைவுத் தூபியொன்றை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமையால் வல்வெட்டித்துறையில் பெரும் பதற்றம் நிலவியுள்ளது.

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் குமரப்பா, புலேந்திரனின் நினைவுத் தூபி அமைக்கப்பட்டிருந்த இடத்தில் புதிய தூபியை அமைப்பதற்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

அதற்கமைய இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அடிக்கல் நாட்டுவதாக அறிவிக்கப்பட்டு, ஏற்பாடுகள் நடைபெற்றது.

இந்நிலையில் அதனை எதிர்த்து வல்வெட்டித்துறை நகர சபையின் சுயேட்சைக் குழுவினர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, அடிக்கல் நாட்டும் இடத்திற்கு வருகை தந்த சுயேட்சைக் குழு உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் குமரப்பா புலேந்திரனின் தியாகத்தில் அரசியல் செய்யக்கூடாது. இதனை நிறுத்த வேண்டுமென்று கோரினர்.

இதனால் இரு தரப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் ஏற்பட்டு அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அடிக்கல் நாட்டவதற்கு வெட்டப்பட்ட குழியை மண்போட்டு மூடியதோடு அங்கு வந்திருந்தவர்களையும் விரட்டியதால் பரபரபான சூழ்நிலை நிலவியுள்ளது. 

No comments

Powered by Blogger.