புரோ கபடி லீக் - பாட்னா பைரேட்சை வீழ்த்தி தமிழ் தலைவாஸ் அணி முதல் வெற்றி!

6-வது புரோ கபடி ‘லீக்’ போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் தபாங் டெல்லி, குஜராத் பார்ச்சுன் ஜெய்ன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், யு மும்பா, புனேரி பல்தான், ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் பாட்னா பைரேட்ஸ், தமிழ் தலைவாஸ், உ.பி.யோதா, பெங்களூரு புல்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்கால் வாரியர்ஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

புரோ கபடி ‘லீக்’ போட்டியின் முதல் ஆட்டம் சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு நடந்தது. இதில் அஜய் தாகூர் தலைமையிலான தமிழ் தலைவாஸ்- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின.

சென்னையில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியை 42 - 26 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வீழ்த்தியது. அந்த அணியின் கேப்டன் அஜய் தாகூர் அதிகபட்சமாக 14 புள்ளிகளை எடுத்து அணியின் வெற்றிக்கு வழிகோலினார்.

#Prokabaddi2018   #புரோ கபடி லீக்   #சென்னை


No comments

Powered by Blogger.