தேவ் படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம் !

ரகுல் பிரீத் சிங் தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு தான் அவரை முன்னணி
கதாநாயகியாக வளர்த்தது. மீண்டும் தமிழுக்கு வந்து முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடித்து வருகிறார். கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்துக்கு பிறகு தேவ் படத்திலும் ஜோடியாகி இருக்கிறார்.
சென்னை, ஐதராபாத், உக்ரைன் உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குலுமணாலியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கு ஏற்பட்ட பெருமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரும் பாதிக்கப்பட்டனர். பொருட்சேதமும் ஏற்பட்டது.
இதனால் தேவ் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டதுடன் படக்குழுவினரும் அங்கிருந்து வர சிரமப்பட்டனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரகுல் பிரீத் சிங்கின் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டன.
முக்கிய நடிகர்கள், நடிகைகள் படப்பிடிப்பை முடித்தால் படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அவர்களை வழியனுப்பி வைப்பது சமீபகாலமாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
அதோடு வரும் அக்டோபர் 10-ம் தேதி ரகுல் பிறந்தநாள் வருவதால் முன்கூட்டியே அதையும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதை ரகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். டிசம்பர் 21-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.