சர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷின் சர்வம் தாள மயம்

`மின்சார கனவு', `கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்' வெற்றி படங்களை இயக்கிய ராஜீவ்
மேனன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `சர்வம் தாள மயம்'.
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு முடிந்து படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படம் 31-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ப்ரத்யேகமாக திரையிடப்படவுள்ளது.
ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன், பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்திலிருந்தும் நிராகரிக்கப்படுகிறான். இன்றைய காலகட்டத்தில் சாதி, மத பிரச்சனைகளை தாண்டி அவனது இசை ஆசை நிறைவேறியதா என்பதே படத்தின் கதை.
காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது.
Powered by Blogger.