"அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்"!

அரசியல் கைதிகளின் விவகாரம் ஓர் சட்ட விவகாரம் அல்ல அது ஓர் அரசியல் விவகாரம். எனவே அரசியல் கைதிகளின் அரசியலை பயங்கரவாதமாக பார்க்குமோர் சட்டக்கட்டமைப்புக்குள் நின்று அதை சட்ட
விவகாரமாக அணுக கூடாது. மாறாக அதனை அரசியல் விவகாரமாகவே அணுக வேண்டும். இது தொடர்பில் அரசாங்கம் ஓர் அரசியல் தீர்மானத்தை எடுத்து கைதிகளை நிபந்தனை இன்றி விடுதலை செய்ய வேண்டும்.
இதனை வலியுறுத்தியும் அரசியல் கைதிகளின்உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக யாழ் பல்கலைக்கழக மாணவராகிய நாம் நாளை காலை பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிளிநொச்சி வவுனியா ஊடாக அநுராதபுர சிறைச்சாலை வரை நடைபயணம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளோம். அனைத்து தமிழ் சமூக ஆர்வலர்களையும் இப் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

No comments

Powered by Blogger.