வடமராட்சி கிழக்குப் பகுதியில் கடலட்டை பிடிப்பவர்களை 48 மணி தேரத்தில் வெளியேறுமாறு பகிரங்க அறிவித்தல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட நிர்வாகப் பகுதிக்குள் தங்கியிருந்து கடலட்டை பிடிப்பவர்களை 48 மணி தேரத்தில் வெளியேறுமாறு பிரதேச செயலாளர் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளார்.

வடமராட்சி கிழக்கில் தங்கி நின்று கடலட்டை தொழிலில் ஈடுபடும் பிற மாவட்டத்தவர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் அரச நிலத்தை அனுமதியின்றி ஆக்கிரமித்து அங்கே வாடி அமைத்து தங்கியிருந்து கடல் அட்டை பிடித்து வந்த நிலையில்

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைக்குள் வாடி அமைத்தவர்களிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவ்வாறு தங்கியிருந்த மீனவர்களை உடன் வெளியேறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் குறித்த மீனவர்கள் அங்கிருந்து வெளியேறியிருந்தனர் .

இதேநேரம் வடமராட்சி கிழக்குப் பகுதியின் பருத்தித்துறை நீதிமன்ற நியாய ஆதிக்க எல்லைப்பரப்பிற்குள் உள்ள குறித்த தொழிலில் ஈடுபடும் பிற மாவட்ட மீனவர்கள் தொடர்ந்தும் அரச நிலத்தில் அனுமதியின்றி தங்கியிருந்து கடல் அட்டை பிடிப்பதனால்

அவர்களிற்கு எதிராகவும் அரச நிலத்தை அத்துமீறி அபகரித்து குடியிருப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் ஏற்கனவே ஒரு தடவை அறிவித்தல் ஒட்டப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் நாகர்கோவில் கிழக்கு , நாகர்கோவில் மேற்கு பகுதியில் இரண்டாவது அறிவித்தலும் ஒட்டப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இரண்டாவது அறிவித்தலில் 48 மணி நேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேச செயலாளர் கனகசபாபதி கனகேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

இவ்வாறு அரச நிலத்தில் அத்துமீறி குடியிருப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் வகையில் முன் அறிவித்தலாகவும் அவர்களிற்கான இறுதி சந்தர்ப்பமாகவும் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டுள்ளது.

 இதன் பிரகாரம் குறித்த 48 மணித்தியாலம் வெள்ளிக்கிழமையுடன் முடிவுறுகின்றபோதும் அங்கிருந்து அவர்கள் வெளியேறாத சந்தர்ப்பத்தில் எதிர்வரும் திங்கட் கிழமை நீதிமன்றில் வழக்குத் தாக்க ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. என்றார்.

வடமராட்சி கிழக்கின் கிளிநொச்சி மாவட்டப் பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்ட பிற மாவட்ட மீனவர்களிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்து அங்கிருந்து வெளியேற்றிய பிரதேச செயலாளரை வடமராட்சி மீனவர் சங்கம் பாராட்டி கடிதம் அனுப்பி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.