முல்லைத்தீவு தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலத்திற்கு தற்போது அனுமதிப் பத்திரம் கிடையாதாம்!

மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் முல்லைத்தீவில் தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலத்திற்கு தற்போது அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்று எனக்கு கூறியபோதும் அங்கே அவ்வாறு அனுமதிப் பத்திரம் வழங்கியமை ஆதாரபூர்வமாக ஆவணத்துடன் கூட்டமைப்பினர் சமர்ப்பித்துள்ளனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நேற்றைய வடக்கு அபிவிருத்திச் செயலணியில் தெரிவித்தார்.

வடக்கு மாகாண அபிவிருத்திச் செயலணி நேற்றைய தினம் கொழும்பில் ஜனாதிபதி தலமையில் இடம்பெற்றபோது குறித்த விடயத்தினை ஜனாதிபதி ஒப்புக்கொண்டார் .

குறித்த செயலணியின் ஆரம்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தனது கோரிக்கைகளை உரையாகத் தெரிவித்தார். இதன்போது கடந்த 2018-08-27 அன்று இடம்பெற்ற செயலணியில் என்னால் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அது தொடர்மில் நடவடிக்கை எடுப்பதாக பதிலளிக்கப்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் மேற்கொள்ளும் போராட்ட நிலம் விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கூறியதை கூறினேன். இருப்பினும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. அதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களில் உள்ள நிலங்கள் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் பண்ணைகள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது.

இருப்பினும் கடந்த கூட்டத்தின் பின்னர் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. மாறாக திணைக்களங்களின் பெயரில் நில அபகரிப்புத் தொடர்வதே பதிவு செய்யப்படுகின்றது. அதேநேரம் மீள் குடியேறிய மக்களின் அபிவிருத்திக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.்இதனால் அவை நகராமலேயே இருக்கின்றது. இவை தொடர்பில் என்ன நடவடிக்கை என்றார்.

இதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் வீட்டுத் திட்டம் வரும் என நம்பி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அமைச்சர்களான சுவாமிநாதன் மற்றும் மனோகணேசனில் அத் திட்டத்தை யார் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அமைச்சர்களிற்கு இடையில் பிணக்கு நிலவுகின்றது. எந்த அமைச்சர் அதனை செய்வது என்பது எமது பிரச்சணை அல்ல.

அதனை அமைச்சரவையில் தீர்த்துக்கொள்ளுங்கள் ஆனால் எமது மக்களிற்கு உடனடியாக வீடு வேண்டும். என்பதே எமது பிரச்சணை. நில ஆக்கிரமிப்பு இடம்பெறும் நிலையில் தமிழர்களிற்கு வழங்கிய நிலத்தை மகாவலி என்னும் பெயரில் பெரும்பான்மை இன மக்களிற்கு வழங்கியதாக நாம் கடந்த கூட்டத்திலேயே கூறியபோது அதன் அதிகார சபை ஜனாதிபதியிடமே அவ்வாறு வழங்கவில்லை.

என மறுத்துரைத்தனர். ஆனால் அவர்களால் வழங்கிய அனுமதிப்பத்திரம் கைவசம் உள்ளதாக கான்பித்து இவற்றிற்கு ஜனாதிபதி தீர்வை முன்வைக்க வேண்டும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாண மாவட்டத்திலே கடந்த ஆண்டு மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சிற்காக குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கீடு செய்தபோதும் இந்த ஆண்டு மிகச் சொற்ப நிதியே ஒதுக்கியமையினால்

மீளக் குடியேறும் மக்களிற்கும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பிற்கும் நிதி இல்லை. இதேநேரம் தேசிய நல்லிணக்க அமைச்சின் கடந்த ஆண்டு ஒதுக்கீட்டின் 152 மில்லியன் ரூபாவும் மீள் குடியேற்ற அமைச்சின் 57 மில்லியன் ரூபாவும் வருமதியாகவுள்ள நிலையில் அப் பணத்தை வழங்குவதன் மூலமே முன்னெடுத்த திட்டங்களை நிறைவு செய்ய முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாடசாலைகள் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பணிகள் இடம்பெறவில்லை. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம் ஆனால் விவசாயப் பண்ணைகள் படை வசமும் சிவில் பாதுகாப்பு படைகளிடமும் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியும் வேலை இல்லாப் பிரச்சணையும் நிலவும் நிலையில் அவற்றின் நிலை என்ன .

இதேநேரம் கிளிநொச்சி மாவட்டத்தில் 9 பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 215 மில்லியன் ரூபா அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதிக் கடிதமும் அத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அதனை நடைமுறைப்படுத்த விடாது மாகாண கல்வி அமைச்சு தடையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கல்வி மாகாணத்திற்கு பகிரப்பட்ட நிலையில் கல்விக்காக ஆயிரம் மில்லியனை போருகின்றோம். இருப்பினும் 200 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது. ஆனால் மத்தி நேரடியாகத் திட்டத்தை அனுமதித்துவிட்டு அதற்கான செலவு மதிப்பீடுகளை மட்டும் எம்மிடம் போருகின்றனர். அந்த நிதியை எம்மிடம் அனுமதித்தால் நாமே தேவையான இடத்திற்கு திட்டத்தை முன்னெடுப்போம் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன்

தெரிவித்தார். இவற்றிற்குப் பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் முல்லைத்தீவில் தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலமும் தற்போது அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்றபோதும் குறித்த ஆவணம் மூலம் வழங்கியமை உறுதியாகின்றது. எனவே மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் குறித்த அதிகார சபை மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மாவட்ச் செயலாளர் தலமையில்

கூடி உடனடியாக இதுதொடர்பில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதேநேரம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்னும் பாடசாலைகளிற்கு உரித்தான நிலங்களில் இருந்து படையினர் அகழ வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. அது நடைமுறைப்படுத்தப்படும். இதேநேரம் வடக்கில் படையினர் சார்பில் நடாத்தப்படும் அரச பண்ணைகள் தொடர்பில் மாகாண ஆளுநர் தலமையில்

மாவட்டச் செயலாளர் மக்கள் பிரதிநிதிகள் உடன் கூடி ஆராய்ந்து அதன் சிபார்சு அறிக்கையை சமர்ப்பிக்கவும். இதேபோன்று ஏனைய மக்களிற்குச் சொந்தமான நிலம் மக்களிற்கே உரித்து என்பதால் நடவடிக்கை எடுக்கப்படும். எனப் பதிலளித்தார். 

No comments

Powered by Blogger.