பெரியகல்லாறு பகுதியில் விபத்து 7 பேர் படுகாயம்!

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி பெரியகல்லாறு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே நேற்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.