அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை!

அமெரிக்கா மற்றும் சீனாவின் உயர்மட்ட அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்படுகின்றது.
இந்து சமுத்திரமும், எதிர்கால முக்கியத்துவமும் என்ற தலைப்பில் நடைபெறவுள்ள மாநாட்டில் பங்கேற்கும் வகையிலேயே இந்த அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
இந்த மாநாடு எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இந்தநிலையில் குறித்த மாநாட்டில் பங்கேற்கும் வகையிலேயே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உதவி ஆலோசகர் பன்காஜ் சரன், அமெரிக்காவின் ராஜாங்க திணைக்கள உதவி செயலாளர் எலிஸ் ஜி வெல்ஸ், சீனாவின் வெளியுறவு அமைச்சின் கடல் வலய திணைக்கள பணிப்பாளர் இ சியான்லியாங் ஆகியோர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
Powered by Blogger.