நக்கீரன் கோபாலை நீதிமன்றக் காவல் அனுப்ப இயலாது!

பிரபல பத்திரிக்கையாளரான நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தொடர்பாக வெளியான செய்திக் கட்டுரை தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

நக்கீரன் புலனாய்வு இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால். சந்தனக் கடத்தல் மன்னம் வீரப்பனை அதிரடிப்படை நெருங்க முடியாமல் தவித்த நாட்களில் இவரும், இவரது குழுவினரும் அவரை சந்தித்து எடுத்த பேட்டிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது, அரசு தூதராக சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் கோபால்!

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிரான கட்டுரைகளுக்காக பல்வேறு வழக்குகளை சந்தித்தவர் கோபால்!  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அரசுத் தரப்புடன் அவருக்கு பெரிதாக மோதல் இல்லை. ஆனால் அண்மையில் அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக நக்கீரனில் வெளியான அட்டைப்பட கட்டுரை புதிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்லூரி மாணவிகளை பாலியல் பேரத்தில் தள்ளியதாக கைதான நிர்மலா தேவி 4 முறை ஆளுனரை சந்தித்ததாக வெளியான அட்டைப்பட கட்டுரைதான் இந்தக் கைதுக்கு காரணம் என தெரிகிறது. புனேவுக்கு செல்வதற்காக இன்று (அக்டோபர் 9) காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் கோபாலை போலீஸார் கைது செய்தனர். ஆளுனரை அரசியல் சாசன பணி செய்ய விடாமல் தடுத்ததாக நக்கீரன் கோபால் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ தகவலை போலீஸார் இன்னும் வெளியிட வில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.