அம்பாரையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று ஆர்ப்பாட்டம்!

காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­க­ளால் பன்­னாட்­டுச் சிறு­வர் தின­மான இன்று மட்­டக்­க­ளப்­பில் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது. மட்­டக்­க­ளப்பு மாவட்ட வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் இந்­தப் போராட்­டம் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.
இது தொடர்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது-,

போர்க் குற்­ற­வா­ளி­க­ளைக் காப்­பாற்­றும் அரசு எம்­மீது அக்­க­றை­யற்­றுள்­ளது. பன்­னா­டு­கள் நேர­டி­யான அழுத்­தத்­தைக் கொடுத்து எமது பிரச்­சி­னைக்­குத் தீர்­வைப் பெற்­றுக் கொடுக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­தியே போராட்­டம் நடத்­து­கின்­றோம்.

வலிந்து காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளின் குடும்­ப ங்­க­ளில் உள்ள சிறு­வர்­கள் பல்­வேறு ஏக்­கங்­க­ளு­ட­ளும், கண்­ணீ­ரு­ட­னும் தமது உற­வு­களை எதிர்­பார்த்­துள்­ள­னர். இந்­தச் சிறு­வர் தினத்­தி­லா­வது பன்­னாட்­டுச் சமூ­கம் அவர்­க­ளின் உணர்­வு­க­ளைப் புரிந்து கொண்டு எமது உற­வு­கள் கிடைக்க வழி­யேற்­ப­டுத்த வேண்­டும் – என்­ற­னர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.