சர்ச்சையில் அனுஷ்கா புகைப்படம்!

பிரபல மாத இதழில் வெளியாகியுள்ள நடிகை அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் காதல் மனைவியுமானவர் அனுஷ்கா ஷர்மா. சினிமாவில் மட்டுமல்லாது விளம்பரப் படங்களிலும் நடித்துவருகிறார் அனுஷ்கா. இன்னொரு புறம் விராட் கோலியும் சினிமாவில் காலடி எடுத்துவைக்கும் விதமாக ட்ரெய்லர் எனும் குறும்படத்தில் சமீபத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் பிரபல ஃபேஷன் மாத இதழான க்ரேஸியா (GRAZIA) இதழின் அக்டோபர் பதிப்பில் அட்டைப்படமாக அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பளபளக்கும் தங்க நிறத்தாலான ஜாக்கெட் அணிந்து தோன்றியுள்ள அவர், தங்கத் தோடு அணிந்திருப்பது ரசிகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதைத் தனது இன்ஸ்டகிராமில் அனுஷ்கா பதிவிட்டுள்ளார். சமூக வலைதள ரசிகர்களில் பலர் இதை வரவேற்று ஹார்ட்டீன் ஸ்மைலிகளைப் பறக்கவிட்டாலும் மற்றொரு புறம் இந்த அட்டைப்படமானது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது. காரணம் அனுஷ்கா ஷர்மா நடித்து திரையரங்குகளில் தற்போது ஓடிக் கொண்டிருக்கும் ‘சூயி தாகா’.
இதன் புரொமோஷனின்போது கைத்தறி நெசவு ஆடையே பேசுபொருளாக இருந்தது. இந்தப் படம் கடந்த வாரம் வெளியாகியுள்ள இந்நிலையில் அனுஷ்கா இந்த வகை உடை அணிந்து போஸ் கொடுத்திருப்பது சரியா எனக் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
க்ரேஸியாவில் அனுஷ்காவின் புகைப்படமொன்று அட்டைப்படமாக இடம்பெறுவது இப்போதுதான் என்றில்லை. முன்னதாக 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வெளியான இதழின் அட்டையையும் அனுஷ்காவே ஆக்கிரமித்திருந்தார்.
நடிகர் ஷா ருக் கான் மற்றும் கத்ரினா கைஃப் நடிப்பில் வெளிவரவிருக்கும் ஜீரோ படத்தில் அனுஷ்கா ஷர்மா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.