லேசரில் சாதனை: மூவருக்கு நோபல் பரிசு!

இந்தாண்டு இயற்பிலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, பிரான்ஸ், கனடாவைச் சேர்ந்த மூன்று பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்தாண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர்களின் பெயர்கள், நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசு விழா நடந்து வருகிறது. நேற்று (அக்டோபர் 1) மருத்துவத்துக்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்டோபர் 2) மூன்று பேருக்கு 2018ஆம் ஆண்டுக்கான இயற்பிலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. லேசர் துறையில் புதிய கண்டுபிடிப்புக்காக இந்த பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர் அஷ்கின், பிரான்ஸைச் சேர்ந்த ஜெரார்ட் மெளரு, கனடாவைச் சேர்ந்த டோனோ ஸ்டிக்லேண்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. ஆர்தர் அஷ்கின் ‘ஆப்டிகல் டிவீசர்ஸ்’ எனப்படும் லேசர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையான ரூ.6.5 கோடியில் 50 சதவிகிதத்தை இவர் பெறுகிறார்.

ஜெரார்ட் மெளரு, லேசர் துறையில் அதிகத் திறன் கொண்ட மிக மெல்லிய லேசர் அதிர்வுகளை உருவாக்கிய காரணத்திற்காக பரிசு பெறுகிறார். இவர் நோபல் பரிசுத் தொகையில் 25 சதவிகிதத்தைப் பெறுகிறார்.

டோனோ, லேசர் துறையில் அதி நுண்ணிய லேசர் அதிர்வுகளை எப்படி இயக்க வேண்டும் என்ற வழிகளை உருவாக்கியதற்காகப் பரிசு பெறுகிறார். இவருக்கும் பரிசுத் தொகையில் 25 சதவிகிதம் வழங்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.