திருமலையில்“தொழில் முனைவோருக்கான சர்வதேச மாநாடு ஆரம்பம்”

ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் முன்னணி சர்வதேச தொழில் முனைவோருக்கான கல்வித் தொடர் மாநாடு, இம்முறை முதல்தடவையாக இலங்கையில் இடம்பெறவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 09,10 மற்றும் 11 ஆம் திகதி திருகோணமலையில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் இறுதி அமர்வு கொழும்பு, ஷங்கிரிலா ஹோட்டலில் நிறைவுறும் எனவும் அவர் தெரிவித்தார்.

யுனெஸ்கோ - எபீட் (UNESCO-APEID) நிறுவனமும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையும் (NEDA) இணைந்து ஏற்பாடு செய்துள்ள, இந்த சர்வதேச மாநாடு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கையில் இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான தொழில்ரீதியான கல்வியை ஊக்குவிப்பதற்காக, இலங்கையின் புதிய பொருளாதார மூலோபாயத்துக்கான வழிகளை, இம்முன்னோடியான இந்த அமர்வு நிறைவேற்றும் என நான் எதிர்ப்பார்க்கின்றேன்.

இந்த மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்கின்றன. அத்துடன், ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறிய வர்த்தக தொழிலதிபர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியியலாளர்கள் கலந்துகொள்கின்றனர் என்றார்.

No comments

Powered by Blogger.