கிளிநொச்சியில் பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்!

கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் தினமும் ஆபத்தை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் முறிகண்டியிலிருந்து முகமாலை வரை 25 இற்கும் மேற்பட்ட பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் காணப்படுகின்றன.

இவற்றில் பல முக்கிய வீதிகள் நாளாந்தம் நூற்றுக்கணக்கான பொது மக்கள் பயணிக்கின்ற வீதிகளாகவும் காணப்படுகின்றன.

இந்த பாதுகாப்பற்ற ரயில் கடவைகளில் கடந்த காலங்களில் பல விபத்துக்களும் இடம்பெற்று பலரும் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்த பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் நிலைமைகளை கருத்தில் எடுத்து, அவற்றை பாதுகாப்பான ரயில் கடவைகளாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, அதிகாரிகளிடம் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.